ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கை

By பொன் கந்தவேல் on May 31, 2021

Card image cap

ரொறன்ரோ பல்கலைகழகம்
ஸ்காபரோ
04 பங்குனி 2021

தலைவர்,
யா/இடைக்காடு மகாவிதியாலய பழைய மாணவர் சங்கம்
ஸ்காபரோ
கனடா.

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 12,650 கனடிய டொலர்கள் உதவுதொகைக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

தங்களது உதவுதொகை எமது இலக்கான மூன்றுமில்லியன் டொலர்களை அடைவதற்கு எமக்கு ஊக்கமளிப்பதுடன் எதிர்காலத்தில் அமையவிருக்கும் ரொறன்ரோ பல்கலைகழக தமிழ் இருக்கைமூலம் எமது தழிழ் மொழியின் வளர்ச்சி, அதன் பாரம்பரியம் போன்றவற்றை உலகெங்கும் பரப்புவதற்கும் அது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்வதற்கும் உறுதுணையாய் அமையும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

ரொறன்ரோ தமிழ் இருக்கை தனக்கானதோர் இலட்சிய நோக்குடன் எம் சமுதாய நலன்களை முன்னிறுத்தி உரிய இலக்கினை அடைவதற்கு உம்போன்ற இலட்சிய நோக்க்ம் கொன்டோரால் இது சாத்தியமாக உள்ளது. மேலும் எமது அடுத்த தலைமுறையினர் உலகின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை காண்பதற்கும் வழிகாட்டிநிற்கும்.

இது தொடர்பான கேள்விகள் ஏதவது இருக்குமாயின் எதுவித தயக்குமுமின்றி எம்முடன் எமது மின்னஞ்சல்மூலமோ 647 601 4579 என்ற இலக்க தொலைபேசிமூலமோ தொடர்புகொள்ளமுடியும் என்பதையும் எதிர்காலத்தில் தமிழ் நிகழ்ச்சி தொடர்பாக தங்களை சந்திப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
தங்கள் தாராள மனப்பாங்கிற்கு மீண்டும் எமது நன்றிகள்,

உண்மையுள்ள,
ஒப்பம்.....(செலஸ்ரி றிச்சாட்)
அபிவிருத்திப் பணிப்பாளர்
ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நிதிப்பங்களிப்பு

மேற்படிபல்கலைகழகத்தில் தழிழ் இருக்கை ஒன்றினை நிறுவதற்குத்தேவையான மூன்று மில்லியன் டொலர்களைத் திரட்டுவதற்கான பல்கலைகழகச் சமூகம் எமது உதவியை நாடி நின்றபோது, இடைக்காடு பழைய மாணவர்களான நாமும் எமதுஊர்மக்களும் உவந்தளித்த உதவுதொகை 12,650 டொலர்களையிட்டு தாம் மிகவும் மகிழ்வடைவாதாக்வும் அதற்காக இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். நிதி சேகரிப்பில் முன்னின்றுளைத்த ரொறன்ரோ பகுதியில் திரு சு. நவகுமாரும் மொன்றியல் பகுதியில் திரு பரமசிவமும் மனதுவந்தளித்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆங்கிலக்கடிதமும் அதன் தமிழ் ஆக்கமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தேவையான மூன்றுமில்லியன் தொகையும் தற்போது சேகரிக்கப்பட்டுவிட்டது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியே. இருக்கை அமைப்பத்தற்கான நடவடிக்கைகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.

அன்புடன்
பொன் கந்தவேல்
28.5.2021