உங்களுக்குத் தெரியுமா?

By Narayanapillai Swaminathan on July 1, 2021

Card image cap

உங்களுக்குத் தெரியுமா?
இடைக்காடடடு கிராமத்தின் விவசாய இயந்திரமயமாக்கலின் முன்னோட்டிகள்.
1970ம் ஆண்டு சிறிமாவோ அம்மையாரின் திறந்த சந்தை வாய்ப்பினால் யாழ் விவசாயிகளின் பணம் புழக்கம் அதிகரித்தது.
இதனால் விவசாய இயந்திரங்களின் அறிமுகம் அதிகரித்தது.
மண்ணை உள் கை உழவு வண்டிகள் வாங்கப்பட்டன.Hand tractors or Two wheel tractors.
1. முதலாவது லார்ட் மாஸ்டரை ஓய்வு நிலை தபாலதிபர் திரு சுப்பர் சிதம்பரம் பிள்ளை அவர்கள் அறிமுகம் செய்தார்.
அதே வகையான ஒரு லார்ட் மாஸ்டரை அவரின் மைத்துனர் திருக.கணபதிப்பிள்ளை(சிவலை) அவர்கள் வாங்கினார்.
2.அடுத்ததாக ஒரு மிற்சுபிசி இயந்திரத்தை திரு வே. கணபதிப்பிள்ளை (கொழுந்துக்காரன்) அவர்கள் வாங்கினார்.
3. மூன்றாவதாக எனது தம்பி நா.இ. ஈஸ்வரன் அவர்கள் ஒரு இசக்கி உழவு வண்டியை வாங்கினார். நான் களுத்துறையில் பணியாற்றிய 1972ம் ஆண்டு இருவரும் கொழும்பு சென்று இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தில் வாங்கி சுமையுந்து மூலம் வீட்டிற்கு க் கொண்டு வந்தோம்.
4. நாலாவதாக பலர் குபோட்டா உழவு வண்டியை வாங்கினனர்.
சரி இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடு யாது?.
லாண்ட் மாஸ்டர் , மிற்சுபி இரண்டும் மண்ணெயில் இயங்கும் மண் கிளறி வகை (Tillers)
வகையைச் சார்ந்தது. அவற்றின் சில்லுகளைக் கழற்றி விட்டு மண் கிளறியை Tillers
பொருத்த வேண்டும்.
மற்றைய இரண்டும் இசக்கி குபோட்டா வண்டிகள் டீசல் எண்ணெயில் இயங்குபவை.
சில்லுகளைக் இவற்றால் அதன் பின் மண் கிளறியை அல்லது கலப்பையை Tillers or Plough தொகுதியை பொருத்தி உழலாம்.
இவற்றுடன் சுமை ஏற்றும் பெட்டியைப் பொருத்தலாம்.
இசக்கி நீரினால் குளிரூட்டும் Water cooled எந்திரத்தை க் கொண்டது. இயந்திரத்தின் மேற்பகுதியில் திறந்த நிலையில் உள்ள கிண்ணம் Hopper உள்ளது.
குபோட்டா வளிக் குளிரூட்டி Air cooled உடையது.
இவை எல்லாவற்றிலும் குபோட்டா பல அனுகூலங்களை க் கொண்டுள்ளதால் இன்றும் பல விவசாயிகளின் உள்ளம்கொள்ளை கொண்டது.
கொழுந்துக்காரன் வே.கணபதிப்பிள்ளை எனது மாமா. வர்த்தக நோக்கில் பாரிய அளவில் வெற்றிலைக் கொடியை பயிரிட்டமையால் கொழுந்துக்காரன் என அன்பாக அழைக்கப்பட்டார். கலகலப்பானவர். சமூக சேவகர்.
ஓமம் வளர்க்காத குருக்கள் இல்லாத எனது திருமணத்தை நடாத்தி வைத்தார்.
எம் முன்னோர்களைப் போற்றுவோம்.