பயம் என்றால் என்ன, பயத்தை எப்படி எதிர் கொள்வது, பயத்தை வெற்றி கொள்வது எப்படி

By நா. மகேசன். on Sept. 9, 2022

Card image cap

பயம் என்றால் என்ன, பயத்தை எப்படி எதிர் கொள்வது, பயத்தை வெற்றி கொள்வது எப்படி

பயம் எப்படி வரும், இப்படித்தான் ஏதேனும் ஒரு புதிய செயலில் இறங்கும்போழுது இயல்பாக ஏற்படும் உணர்வாக அதை நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களை பின்னடைவாக கொண்டு சென்று விடுமோ என்று நீங்கள் எண்ணலாம். இதை எல்லோரும் அனுபவிக்கின்றார்கள் என்பதை பலரும் உணரத் தவறி விடுகின்றார்கள். உதாரணத்திற்கு பார்ப்போம் பெரிய தொழில் அதிபர்கள், பிரபல பாடகர்கள் போன்றவர்கள் முதல் முதல் ஒரு செயலைச் செய்யும் பொழுது நடுங்கத்தான் செய்கிறார்கள். ஒரு புதிய செயலில் நீங்கள் இறங்கும் போழுது பயப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்வதில் எந்தவித அச்சமும் கொள்ளாதீர்கள்
1. எதிர்காலத்தில் வரும் பயத்தை எதிர்கொள்வதற்கு சிறந்தவழி எது, அதுதான் நிகழ்காலத்தில் அதிக அக்கறை காட்டுவது.
2. பயத்தை நீக்குவதற்கு சிறந்தவழி அதை எதிர் கொள்வதுதான்.
3. ஒவ்வொரு முயற்சியிலும் உங்கள் சவாலை எதிர் கொள்ளுங்கள், அது உங்களது பயத்தை நீக்கும்.
பயத்தை எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு நீங்கள் மிக அருகில் இருந்தால் அது பொதுப்பணிகளிலோ, சமூகப் பணிகளிகளிலோ பின் அடைவைத்தான் ஏற்படுத்தும். ஆனால் அதை உயர்ந்த நோக்கத்துடனும், மனவலிமையுடனும் பார்க்கும்போது, அவை சிறிய பிரச்சனையாகத்தான் தோன்றும். பழைய பயத்துடன் உங்கள் பிரச்சனையை தொடர்ந்து எண்ணிக் கொண்டிருந்தால், நீங்கள் உங்களுக்கே குழிதோண்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றுதான் நான் சொவேன், அது உங்கள் மனதில் ஆழமாகத் தோன்றி அதில் இருந்து மீழ முடியாதா அழவிற்கு கொண்டுபோய் சேர்த்து விடும். இதற்குப் பதிலாக நீங்கள் புதிய சிந்தனைகளில் விடைகளைக் காண முயற்சியுங்கள். இதில் இருந்துவரும் பயமில்லாத துணிச்சலான நல்ல விடைகளைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
பலர் பயத்தை தனித்துவமான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள், அது தவறாகப் போகுமோ, அதில் கவனம் செலுத்தினால், அது மோசமான எதிர் விளைவுகள் ஏற்படாமல் தடுக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது அப்படி செயற்படுவது இல்லை பயம் என்பதூங்கள் முன்னேற்றத்தில் விரயம். அது உங்கள் வலிமையைக் குறைத்து துன்பத்தில் தள்ளிவிடும் பாருங்கள் நீங்கள் பயப்பட்ட செயல்களில் எத்தனை விடயங்கள் உங்களுக்கு நடந்து இருக்கின்றன, பெரும்பாலும் நான் சொல்வேன் மிக்க் குறைவாகத்தான் என்று பயத்தை எதிர் கொள்ளும் மன உறுதி இருந்தால் அவர்கள் இன்னும் பயத்தின் எண்ணிக்கையை குறைத்து இருக்கலாம்.
சிலர் பயத்தினால் முயற்சி செய்வதில்லை, பயிர் செய்தால் மழைஅழிக்கும், விலங்குகள் விடாது, பயிர் செய்தால் செலவுகள் அதிகமாகும், நட்டம் வரும். விளைச்சலை லாபத்திற்கு விற்க முடியாது, என்று தங்களுக்குத் தாங்களே பயத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்நாள் முழுவது வறுமையாகவே வாழ்ந்து வாழ்க்கையில் அர்த்தம் அற்றவர்களாக வாழ்கிறார்கள்.
ஆனால் நான் ஆரோக்கியமான பயத்தை மக்கள் கொள்வதை ஏற்றுக் கொள்வேன்
1. ஒரு கொடிய விலங்கிற்கு கிட்டப்போக பயப் படுங்கள்.
2. ஒரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது பொதுரீதியாக ஒருவரைப் பாதிக்கும் செயல்களுக்குப் பயப்படுங்கள்.
3. ஒருவரைப்பற்றி சாக்குப் போக்கு பேசப் பயப்படுங்கள்.
4. ஒருவரை ஏமாற்றப் பயப்படுங்கள்.
5. நம்பிக்கைத் துரோகம் செய்யப் பயப்படுங்கள்.
6. சமூகப் பணிகளோ அல்லது பொதுப்பணிகளோ செய்பவர்களை எதிர்ப்பதற்குப் பயப்படுங்கள்.
7. ஒருவரின் வளர்ச்சியையும்,முன்னேற்றத்தையும் தடுப்பதற்குப் பயப்படுங்கள்.
8. பொதுச் சொத்துக்களை அழிப்பதற்குப் பயப்படுங்கள்.
பொதுவாக பயமும் கவலையும் பலபேரை முடக்கிப் போட்டு. கோபமும், ஆத்திரம் மிக்கவர்களாக மாற்றி இருக்கின்றது. நீங்கள் பயம் கொள்வதற்கு காரணம் உள்ளது, முன்னர் நடந்த நட்டங்களும் தோல்விகளும் தான். ஆனால் இந்த பயத்திலால் நாங்கள் சாதிக்கப்போவது எதுவும் இல்லை. இது எனது தனிப்பட்ட முன்னேற்றத்திற்கோ அல்லது பொது முன்னேற்றத்திற்கோ வழிகோலாது, இதில் இருந்து நாங்கள் வெளிவருவதற்கு நாங்கள் பயத்தில் இருந்து விடுபடவேண்டும். பயப்படுபவர் என்ற எண்ணத்தை மாற்றுவதற்கு பலவழிகள் இருக்கின்றது. அதில் ஒருவழி என்னை ஆதிக்கம் கொள்ளும் எண்ணங்களை உறுதியுடன் கடைப்பிடிப்பது.
இப்படிப்பட்ட கற்பனை, சிந்தனைகள் நல்ல முன்னேற்றத்தைத் தரும் என்று நான் எண்ணுகின்றேன். உங்கள் மனதுக்குள் ஒரு கற்பனை. விவசாய கற்பனைப் பண்ணைகளை உருவாக்குங்கள். அங்கே பயிர்களின் வளர்ர்சியையும், விளைச்சலையும் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.இப்படிப்பட்ட பல கற்பனை சிந்தனைகளை உருவாக்கி உங்கள் பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கி மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக மாறுங்கள்.
சரியானது என்று தெரிந்தும் செய்யாமல் இருப்பவன் பயந்தவன்.

மீண்டும் இன்னுமொரு பதிவில் உங்களுடன் நான்
நா. மகேசன்