நீத்தார் நினைவுகள் - அமரர் கணபதிப்பிள்ளை வைரமுத்து

By பொன் கந்தவே ல் on Dec. 16, 2023

Card image cap

உலகில் பிறப்பெடுத்த மனிதர் எவருமே என்றோ ஒருநாள் இவ்வுலகை விட்டுத்தானே போகவேண்டும் என்னும்
பொதுவிதிக்கேற்ப, இன்றுவரை எம்மத்தியில் எம்மில் ஒருவராக, எம்மோடு ஒருவராக வாழ்ந்துவந்த
கணபதிப்பிள்ளை வைரமுத்து இன்று எம்முடன் இல்லை . எம் தாயக மண் இடைக்காட்டில் பிறப்பெடுத்து எம்
மக்களுடன் மக்களாக அவர்களுடன் நகமும் சதையுமாக வாழ்ந்து புலம் பெயர்ந்து இக்கனடிய மண்ணி ல்
24 வருடங்களாக தன் உறவுகளுடன் வாழ்ந்து வந்த அற்புத ஜீவன் செல்லவேண்டிய இடத்துக்கு
சென்று விட்டார்.
ஆம், சின்னையா போஸ்மாஸ்டர் என எல்லோராலும் அழைக்கபட்ட கணபதிப்பிள்ளை வைரமுத்துவை
தெரியாத எவருமே எம்மூரில் இருக்கமாட்டா ர்கள். விவசாயத்தையே ஜீவனோபாயமாகக்கொண்ட எமது
கிராமத்தில் அவரும் ஓர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் எமக்கு ஒரு தபாலகத்தின்
முக்கியத்துவத்தை அறிந்த அவரது தந்தையார் தனது சொந்தமுயற்சியால் அமைக்கப்பட்ட உப
தபாலகத்தில் தனது மகனான வைரமுத்துவையே தபாலதிபராக்கி மக்ளுக்கு சேவயாற்ற வைத்தது
எத்தனை பெரியகாரியம்.
எமது கிராமம் மிகச்சிறியதுதான். எம்மை விடபெரியகிராமங்கள் பல தபாலக வசதியின்றி இருந்தபோதும் எம்
கிராமத்திகென ஒரு தபாலகத்தினை உருவாக்கிய அமரர் கணபதி ப்பிள்ளை யின் முயற்சி
பாராட்டப்படவே ண்டியதே .
வி ஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்துவி ட்ட இன்றைய காலகட்டத்தி ல் தபாலகத்தின் தேவை
குறைந்துவிட்டபோதிலும் அன்றய காலகட்டத்தி ல் கைத்தொலைபே சி என்றால் என்னவென்றே தெரியாத
காலகட்டத்தில் பொதுத் தொலைத்தொடர்பு சாதனமாக தபாலகங்களே செயற்பட்டு வந்தன. தபாலக சேவை
மக்கள் மத்தி யி ல் அத்தியாவசிய சேவையாகவே செயற்பட்டுவந்தது. தபால் அதிபர் சேவையும் மக்கள்
மத்தியில் தவி ர்க்கமுடியா த பணியாகவே கருதப்பட்டுவந்தது.
வெ றுமனே முத்திரை விற்பதும் தந்தி அடிப்பதும்தான் அதன் சேவை அன்று. பணம் அனுப்புவது,
பணச்சேமிப்பு,தேசிய சேமிப்பு வங்கி யின் முகவராக செயற்படல், அரச ஓய்வூதி யம் வழங்கல்,
வறியோருக்கா ன மாதா ந்த கொடுப்பனவு வழங்கல்,அரச வர்த்தமானி வழங்கல், அரசாங்க பரீட்சைக்குத்
தோற்றுவோருக்கு தபாலக அறிமுக அட்டை வழங்கல் இன்னொரன்ன அதன் சேவைகள் முக்கியமானது,
இதி லிருந்தே ஒரு தபாலதிபரி ன் சேவை எவ்வளவு பொறுப்பானது, முக்கியமானது என்பதை நாம்
அறிந்துகொள்ளலா ம்.
ஆம், இவ்வாறு பொறுப்பா ன சேவையை 1953ம் ஆண்டுமுதல் 1990ம் ஆண்டு வரை எவ்வித குறை
குற்றமுமின்றி ஆற்றிய அமரர் வைரமுத்துவை எப்படிப்பா ராட்டினா லும் அது மிகையா கா து. அவர் காலை
எட்டு மணிக்கே கடமைக்குவந்து விடுவா ர் மதிய உணவுவேளை போக மீதி வேளை கடமை யி ல் சமூகமாகி
இருப்பதை காணலா ம்.
அப்போதெல்லம் இபோதுபோல் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை க.பொ .த. போன்ற
அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றுவதானால் தபால் அதிபரினால் கையப்பம் இடப்பட்ட தபாலகத்தா ல்
வழங்கப்படும் அடையாள அட்டையே சமர்ப்பிக்கப்படல் வேண்டும். 1965ல் நா ன் க.பொ .த. பரீ ட்சைக்கு
தோற்றியபோது அவர் கையொப்பம் இட்டு வழங்கிய அடையாள அட்டை இன்னமும் பத்திரமாக என்னி டம்
உள்ளது.
அது மட்டுமனறி அத்தபாலகத்தில் வந்த அரசவர்த்தமானியில் வந்திருத்த விளம்பரத்தை ப் பார்த்தே நான்
விண்ணப்பித்து அரசசேவைக்கு தெரிவானே ன். நான் மட்டுமல்ல என்னும் மூவர் எமது ஊரி ல் அதே அரச
சேவைக்கு சேர்வதற்கு அன்று நாம் பார்த்த வர்த்தமானியே காரணமாய் அமைந்தது.
இவ்வாறு எமதூர் தபாலகமூலம் நாம் அடைந்த நன்மைகள் அளப்பரியன. கட்டிடம் தனியே காரியமாற்றுமா?
அதற்கு காரணமாய் அமைந்தவரே தபால் அதிபர்தான்.

இடைக்காட்டில் உயிர்பெற்று பிறந்த மண்ணுக்கு பெரும் சேவையாற்றி தன் பிள்ளைகள் மூலம் கனடிய
மண்ணிற்கு குடி பெயர்ந்து இம்மண்ணில் கால்நூற்றாண்டுகாலம் சிறப்புற வாழ்ந்து அமரராகிவி ட்ட
அன்னாரின் ஆன்மா நற்கதிபெறுவதாக.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வை க்கப்படும். --- குறள்

பொன் கந்தவே ல்
கனடா ,
13.12.2023