By நா. மகேசன் on April 27, 2025
நல்ல தலைவனைத் தெரிவு செய்யாவிட்டால் நாடு சரி,
நல்ல வழிகாட்டியைத் தெரிவு செய்யா விட்டால் சமுதாயம் சரி.
உங்கள் இலட்சியங்களை, அதி வேகத்தில் அடைய விரும்புகிறீர்களா, உங்கள் சொந்த மன உறுதியில் மட்டும் நீங்கள் தங்கி இருந்தால், உங்களது கொள்கைகளை மாற்றுவது, உங்களுக்கே பெரும் சவலாக அமையும். உங்கள் மன உறுதி இருக்கட்டும். அதை விழிப்புணர்வுடன் செயல்படுத்தினாலே இது வேலை செய்யும் உங்களது விழிப்புணர்வு நடவடிக்கைகளை மற்றவர்களுடன் ஒத்து இசைவு செய்வதால் மாத்திரம் இதை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் நீங்கள் எதில் திறமைசாலிகளோ அதில் திறமையைக் காட்டுங்கள். மற்றவைகளை பிறரிடம் பகிர்ந்து விடுங்கள். செயல் திறமை என்பது நீங்கள் பணத்தை கையாளும் முறையில் தான் உங்களுக்கு வலிமையூட்டும்.. இல்லையேல் உங்களைப் பின்தள்ளிவிடும். நாம் முன்பு செய்த தவறுகளை, திருத்திக் கொண்டால் அதே தவறை வரவிடாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும். இதைக் கடைப்பிடித்தாலே நமக்கு கெளரவத்தைத் தரும். நீங்கள் விரும்பியதை உருவாக்க வேண்டும் என்றால் சமூகத்தில் ஆதரவையும், அங்கீகாரத்தையும் பெற வேண்டும். அறிவு, திட்டம், தொடர்புகள் மற்றும் பிற காரணங்களையு,ம், மற்றவர்களுடன் , இறங்கிப் பேசாமல் விடுவது முட்டாள்தனம். இச் செயல் எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டையாக அமையும்.
மேல் கூறப்பட்ட தகவல்களை வைத்து, நீங்கள் இப்பொழுது என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதைச் சிந்தியுங்கள். இதுதான் மிகப் பெரிய கேள்வியாக அமையும். இதனை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் நாம் நினைத்த விருப்பங்கள், ஆசைகள், அபிலாசைகள் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறும்.
. 1. கடந்த காலத்தில் நீங்க செய்த தவறுகளை எப்படி கருதுகிறீர்கள்.,
2 .உங்கள் தவறுகள் குறித்து என்ன செய்வீர்கள்
3. உங்களுடன் மற்றவர்கள் எவ்வாறு சேர்ந்து பணியாற்றுக் கொள்வீர்கள் என்பதை எப்படி செய்வீர்கள்
4. உங்களது திட்டத்தை எப்படி பயன்படுத்துவீர்கள் ( நீங்கள் உங்களை மதிக்காதவரை, மற்றவர்கள் உங்களை மதிக்கமாட்டார்கள்.
நமது நடவடிக்கைகளை எழுத்து பூர்வமாக வைத்திருக்க வேண்டும் என்பது , எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். என்னை எதிர் காலத்தில் பலமாக வைத்து இருப்பதற்கு நான் நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய நியதிகள், இதைக் கடைப் பிடியுங்கள். எல்லோரும் இல்லையேல் நீங்கள் செய்த செயல்பாட்டு நடவடிக்கைகளை நீங்களே மறந்து விடுவீர்கள். மற்றவர்களின் கேள்விகளுக்கு உங்களிடம் விடை இல்லாமல் போகும். எழுத்துபூர்வமான ஆதாரம் என்பது மற்றவர்களின் பொய்யில் இருந்து உங்களைக் காப்பாற்றும். ஒன்றுக்கும் உதவாத சில பொய்களையும் விரட்டி அடிக்கும். இல்லாத அறிவை இருப்பதாக கற்பனை செய்வது கல்வியாகாது. அது அறிவாமையே, இது உங்களுக்கு தன் நம்பிக்கையை கொடுக்கும். இது உங்களை அடிமட்டத்திற்கு கொண்டு போய் விடும். நமது அறிவே எமது பலமாகும், பிழைகளை நாம் மூன்று விதமாக கையாளலாம்.
பொருட்படுத்தாமல் விடலாம்
எதிர்காலம்
அவற்றை ஏற்று சரிப் படுத்திக் கொள்ளலாம்.
இதில் மூன்றாவதைக் கடைப் பிடித்தால் நீங்கள் வெற்றியாளர்கள் ஆவீர்கள், வாய்ப்புக்கள் தடைகளைப்போல மாறுவேடம் பூண்டு வரும். அதனால் பெரும்பாலனவர்கள் அவற்றை உணருவது இல்லை. பெரிய தடையாக இருந்தால் வாய்ப்பும் பெரிதாக இருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக ஒருவர் தான் விரும்பிய எல்லாவற்றையும் சொன்ன பின்தான் விரும்பாதவற்றைக் கேட்க நேரிடும். பாதுகாப்புடன் இருங்கள் சொற்களை எப்படி விட வேண்டும் என்பதையும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அறிவாளி பேச முன் சிந்திக்கின்றான். அறிவு இல்லாதவன் பேசியபின் கவலைப் படுகின்றான். நீங்கள் தேர்ந்து எடுத்ததை சொல்வதை விட சொல்வதை தேர்ந்து எடுங்கள். இதனைக் கடைப் பிடியுங்கள்.
பிறரை தன்னைப் போல் நினைப்பது
பாரபட்சம் காட்டாமை
மற்றவர்களைப் புண்படுத்தாமல் இருங்கள்
சமுதாய நன்மை குறித்த எண்ணம்
நல்ல விடயங்களை செய்வதற்கு எமக்கு நேரம் உள்ளது என்று நினைவில் கொள்ளுங்கள்.
நா. மகேசன்
கனடா.