By நா. மகேசன் on July 11, 2025
முன்னேற்றவாதியும், பின்னேற்றவாதியும்
இதன் அர்த்தமென்ன?, வாழ்க்கையின் அர்த்தம்தான், இதன் வரைவிலக்கணம் என்ன? சுய சிந்தனைதான். சுய சிந்தனை உள்ளவர்கள் எல்லோரும் முன்னேறிக்கொண்டே போவார்கள். சுய சிந்தனை அற்றவர்கள் இதற்கு நேர் எதிர்மறையாகப் போவார்கள். ஆனால் மற்றவர்களின் சுய சிந்தனையை கேட்டு நடப்பவர்கள் முன்னேறவும் மாட்டார்கள், பின்னேறவும் மாட்டார்கள், சாதரணமாக வாழ்வார்கள். இந்த உலகத்தில் 70 வீதமான மக்கள் இப்படித்தான். மறைந்து இருக்கும் ஆசைகளை, தேடிக்கண்டு பிடிப்பது ஒரு விபரீத தந்திரம். கற்பனை என்பது சுய சிந்தனையின் குழந்தை, கற்பனைத் திறன் இல்லாதவன் கையை விரித்துக் காட்டுவான். இது மறைமுகமாக உங்களைப் பின்தள்ளி விடும். பின்வரும் காரணங்கள்;
பிறர் எப்படி வாழ்கிறார்கள் என்று நீங்கள் அவதானிப்பது உண்டா?
பிறருடைய வளர்ச்சியைப் பார்த்து நீங்கள் தடுமாறுபவர்களா?
பிறரை அதிர்ச்சிக்குள்ளாக்குவதில் உங்களுக்கு மகிழ்ச்சியா?
நண்பர்களைவிட்டு தனியாகச் சென்று உணவு அருந்துவீர்களா?
நீங்கள் மற்றவர்களுக்கு சிரமத்தைக் கொடுப்பவரா?
முன்னேற்றவாதிகள் இப்படித்தான்;
சுய சிந்தனைக்கு அத்திவாரம் போடுவார்கள்
கற்பனையில் தோன்றிய சுய சிந்தனைக்கு செயல் திட்டங்களை அமைப்பார்கள்.
தங்களின் திறமைக்கும், வசதிக்கும் ஏற்றவாறு சுய சிந்தனையை மாற்றிக் கொள்வார்கள்.
சுய சிந்தனையின் தெளிவான, நிழல்படத்தை தயார் செய்து கொள்வார்கள்
ஏதோ ஒரு சுய சிந்தனையை வெளிக் காண்பிக்க நினைக்கும்பொழுது சில சமயங்களில் ஏதோ, உக்கிரமான போர் நடப்பதுபோல் உணர்வு இருக்கும். சுட்டு எரிக்கும் வெய்யிலில் ஒரு குவி வில்லையை ஒரு தாளின்மேல் அசைத்துக் கொண்டுடிருந்தால் தாளில் தீ பற்ற மாட்டாது. ஆனால் அதை ஒரு நிலைப்படுத்தினால் தீ பற்றிக் கொள்ளும். அது போலத்தான் சுய சிந்தனை உள்ளவர்கள் முன்னேறிக் கொள்வார்கள். ஞாபகத்தில் வைத்து இருங்கள் கற்பனை வேறு, கனவுகள் வேறு. பின்னேற்றவாதி கனவுகள் காண்பான், கனவுகள் பலவீனமானவை. ஆனால் பின்வருவனவற்றைக் கடைப் பிடித்தால் கனவுகள் நனவாகிவிடும்.
வழிகாட்டுதல்.
அர்ப்பணிப்பு.
மனவுறுதி
கடமை.
கட்டுப்பாடு.
இதுவே ஒரு பின்னேற்றவாதிக்கு முன்னேற்றவாதியாக மாற்றுவதற்கு உந்தப்படும் காரணிகள்
பெரும்பாலன மக்களிடம் அவர்களுடைய வாழ்க்கையில் அர்த்தம் என்னவென்று கேட்டால் வெற்றியும் ,மகிழ்ச்சியும்தான் என்று சொல்வார்கள்.. அவ்வளவுதான். இவைகள் எல்லாம் விருப்பங்கள்தான். இதில் ஒன்றுகூட தெளிவான இலக்குகள் இல்லை.
சுய சிந்தனையின் காலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.
குறுகியகால சுய சிந்தனை – ஒரு வருடம்.
இடைக்கால சுய சிந்தனை – மூன்று ஆண்டுகள்.
நீண்டகால சிய சிந்தனை – ஜந்து ஆண்டுகள்.
சில நேரங்களில் நோக்கங்கள் ஜந்து ஆண்டுகளாகவும் இருக்கலாம். ஆனால் அது அப்போது உயர்ந்த சுய சிந்தனையாக மாறிவிடும். இந் உயர்ந்த சுய சிந்தனைகள் பயனுள்ள குறிக்கோள்களாக மாறிவிடும். இதனை நாங்கள் எளிதில் அடைந்து விடலாம்.
நான் சொல்வேன். நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இந்த மூன்றையும் வலுக்கட்டாயமாக கடைப் பிடியுங்கள்.
1. உங்களது தோல்விகளை மற்றவர்களுக்குக் கூறாதீர்கள்.
2. உங்களது பலவீனங்களை மற்றவர்களுக்குக் கூறாதீர்கள்.
3. உங்களது எதிர்கால திட்டங்களை மற்றவர்களுக்கு கூறாதீர்கள்.
முன்னேற்றம் என்பது அசுரவேகத்தில் உங்களை நோக்கி வரும்.
நா. மகேசன்.
கனடா..\