By நா. மகேசன் கனடா on Dec. 22, 2025
உங்களுக்கு மற்றவர்களின் மேல் எவ்வளவு பாசம் உள்ளது என்று நீங்கள் அளவீடு செய்வீர்கள்
நீங்கள் உங்களையே நேசித்தால் உங்களுக்கு மற்றவர்களையும் நேசிக்க மனம் உந்தும். இது மன உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சிகளில் இருந்து உங்கள் மன உணர்ச்சிஉங்களுக்குகள் வெளிப்படுகின்றது. நீங்கள் ஆரம்பத்தில் அன்பைப் பெற்று இருந்தால், நீங்களும் மற்றவர்களின் மேல் அன்பைச் செலுத்துவீர்கள்.. நீங்கள் ஆரம்பத்தில் அன்பைப் பெறாவிட்டால் இவை எல்லாம் நேர், எதிர்மறையாக மாறும். இதை பெற்றோர், பாதுகாவலர்கள், உறவினர்கள் மிகவும் அவதானிக்க வேண்டியதாகும்.
பிறர் உங்களை நேசிக்காமல் விட்டால், நீங்களும் ஒருவரையும் நேசிக்க மாட்டீர்கள். சிலரிடம் நேர்மறை உணர்ச்சிகளும், எதிர்மறை உணர்ச்சிகளும் கலந்தே இருக்கும். இதில் நேர்மறை மகிழ்ச்சியைத் தரும். மகிழ்ச்சி என்றால் வரைவிலக்கணம் என்ன ? அன்பு, பாசம், நேசம், அமைதி, சாந்தம், கருணை இவைகளின் கூட்டு மொத்த வெளிப்பாடே!. இவைகள் ஒரு மனிதருக்கு வெற்றியைக் கொடுக்கும். உங்கள் மன நிறைவின் கலவை எப்படி இருக்கின்றது, அது உங்களுக்கு சந்தோசம் அதிகமாகவும், சந்தோசம் குறைவாகவும் இருக்கின்றதா?. கூட்டிக்கழித்துப் பார்த்தால் நேர்மறை உணர்ச்சிகள் மிகுந்து மகிழ்ச்சி உச்சத்தில் நிற்கின்றதா என்று மகிழ்ச்சியின் வரை படத்தைப் பார்த்தால் உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சிப் பக்கமா அல்லது சோகப்பக்கமா என்று புரியும்.
கணவனுடன் அன்பாக வாழத பெண் நல்ல அன்பான மாமியாராக வாழ்வது இல்லை. கணவர் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாலும் அவர் தோல்வியே கண்டார். இது அன்பின் குறைபாடா ,பாசத்தின் குறைபாடா, நேசத்தில் தடங்கலா நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இந்த மாதிரி குணமுடைய மனிதர்கள் பிற்கால வாழ்க்கையில் அன்பு என்ற சொல்லுக்கே இடமில்லாதவர்கள் ஆகிவிடுகின்றனர். ஆனால் நான் சொல்வேன் இது தீர்க்கப்பட முடியாத பிரச்சனை இல்ல என்று.
ஒப்புக் கொள்ளாத இரு மனங்களை, யாரும் திருமணம் செய்து வைப்பது இல்லை. காதல் என்பது ஒரு பாதையில் செல்வது இல்லை. இரு மனமும் ஒரே பாதையில் செல்ல வேண்டும் காதலித்து இருவரும் திருமணம் நிறைவேறாவிட்டால் இவர்கள் இருவருக்கும்.அன்பைப் பரிமாறிக் கொள்வதில் ஏதோ தர்மசங்கடம் இருக்கின்றது, அல்லது சங்கடங்கள் இருக்கின்றது.
ஒருவேளை திருமணம் ஆகப்போகின்றவள் பெற்றோரிடம் இருந்து அன்பை எதிர்பார்த்து ஏமாந்தவளாக இருக்கலாம். இதனால் அவளுக்கு வாழக்கையில் வெறுப்புக்கள் ஏற்பட்டு இருக்கலாம். ஏதோ ஒரு காரணம் மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்தும் இருக்கலாம். ஆனால் இவர்கள் கணவனுடன் கிட்ட நெருங்காமல் அன்பு, பாசம் என்பவற்றை வளர்த்துக் கொள்ளாமல் சற்று தூரத்திலேயே இருப்பார்கள். இவர்களின் முகத்தில் புன்னகை என்பது கார்த்திகைப் பூப்போல் எப்போதாவது தான் வரும். கேட்ட கேள்விகளுக்கு ஆம், இல்லை இருக்கிற இடம் தெரியாது போன்ற விடைகள்தான் வரும். இவர்கள் கடந்தகால எண்ணங்களை பின்தொடர விடக்கூடாது. இவர்கள் இன்றைய நிலையை நினைத்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மிகவும் முக்கியமான விடயம் நாம் அன்பாக வாழ்வதற்கு சில சோகப்படுத்தும் உணர்வுகளும் துணைபுரிகின்றது. எல்லையை மீறாதபடி நாங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லோரது வாழ்விலும் சோகம், பயம், வெறுப்பு, கோபம், விரோதம் வரத்தான் செய்கிறது. இவற்றை நாங்கள் கையாள்வதில்தான் எங்களது உணர்ச்சிகள் இருக்கின்றது. இவைகளை நாங்கள் சரியாக கையாளாவிட்டால் அருவெறுப்பு, வெறுப்பு, பொறாமைவரை கொண்டு சென்று விடும். இவைகளை நீங்கள் கையாளும் ஆழுமையில்தான், உங்கள் வாழ்க்கை மறுசீரமைக்கப்பட்டு நிறைவான வாழ்வாக மாறும். அன்பும் பாசமும் ஊற்று எடுக்கும். ஷேக்ஸ்பியர் சொன்னார், உணர்ச்சிகளில் மிகவும் கெடுதியானது பயம்தான். விலங்குகளைப் பயமுறுத்தும்போது அவை அடங்கிவிடுகின்றன. மனிதனும் இப்படித்தான், பயந்தால் அவன் ஸ்தம்பித்துப் போகின்றான்.
இனி பாசம், நேசத்திற்கு வருவோம். ஒருவருக்கு தாய் ஒரு பாதணியை வாங்கிக் கொடுக்கிறாள். அந்த மகன் தாயின் ஞாபகமாக ஒவ்வொரு நாளும் அதை அணிகிறான்
அதனால் அது பழுதடைந்துவிட்டது. மகனும் அதை கைவிடுவதாயில்லை. அவனின் உறவினர் அவனுக்கு அவன்மீதுள்ள நேசத்தால் புதிதாக பாதணி ஒன்றை வாங்கிக் கொடுக்கின்றார். இது பாசமா? அன்றி நேசமா?. நீங்களே விடையைக் காணுங்கள் !
கணவன் மனைவிக்குள் விரிசல் வருவதற்கு முக்கிய அத்திவாரமான காரணம் என்ன?. கணவனின் எதிர்பார்ப்புக்களை, மனைவி நிறைவேற்றத் தவறுவது, மனைவியின் எதிர்பார்ப்புக்களை கணவன் நிறைவேற்றத் தவறுவது, இது இரண்டையும் சரிவரச் செய்து விடுங்கள். உங்கள் வாழ்க்கை தேவதத்த மரம் போல் உயர்ந்த வாழ்வாக மாறும்.
நா. மகேசன்.
கனடா.