By நா. மகேசன் கனடா on Jan. 21, 2026
தலைமைத்துவம் என்றால் என்ன?, அதன் வரைவிலக்கணம் என்ன?,
தலைமைத்துவத்தை நிர்வகிக்கும் திறமைதான்.
எல்லோருமிதைப் பற்றி புரிந்து கொள்வார்கள். ஆனால் வெகு சிலரே இதைக் கடைப் பிடிக்கிறார்கள். நம்மில் பலர் தலைவர்களாக வர விரும்புவதால் நாங்கள் மிகவும் உந்து உணர்ச்சிகளோடு அதில் ஈடுபட்டு வருகின்றோம். தலைமைத்துவத்தை நாங்கள் ஒரு ஆளுமை, திறமை என்று வர்ணிக்கிறோம் ஆனால் பத்துப் பேரிடம் கேட்டுப் பாருங்கள், பத்துப்பேரும் இருபது விதமான கருத்து ஒப்புவமையை முன் வைப்பார்கள். நான் சொல்வேன், தலைமைத்துவம் என்பது செல்வாக்கு மட்டும்தான். இவர்கள் செல்வாக்குடன் சொல்வாக்கையும் கடைப்பிடித்தால் தான் தலைமைத்துவம் நீடித்து நிற்கும்.
ஒரு பெரு முயற்சியில் வெற்றி பெறுவதற்கான திறவுகோல், பிறரை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும் திறமையை நாங்கள் கொண்டு இருப்பதுதான். எல்லாமே தலைமைத்துவத்தில் தான் தொடங்குகின்றன, அவ்வாறே முடிவும் அடைகின்றன. இக் கலையில் நீங்கள் கொண்டு இருக்கும் திறமையினால் பிறரை வழி நடத்திச் செல்கிறீர்கள். இதனை மறந்தும் விடாதீர்கள், மறுத்தும் விடாதீர்க்கள். வேறு விதமாக கூறினால் உங்கள் தலைமைத்துவத்தின் திறமைதான் உங்களைச் சுற்றிப் பணியாற்றுபவர்களின் வெற்றி நிலையையும் நிர்ணயிக்கின்றன. தலைமைத்துவம் என்பது ஒரு தனிப்பட்ட குழுவினருக்கு ஆனது அல்ல. தலைமைத்துவத்திற்கு அடித்தளமாக விளங்கும் நேர்மை, நீதி கடமைப் பண்புகள் இவற்றோடு ஆழ்ந்த விருப்பத்தையும் இணைத்துக் கொண்டால், உங்களை மற்றவர்களால் ஏதும் செய்யமுடியாது.
தலைமைத்துவம் என்பது நம்மை வளர்த்துக் கொள்வதுதான், கடைப்பிடிப்பது அல்ல. பண்பு நலத்தோடு பொது நலமும் சேர்ந்ததுதான். தலைமைத்துவம் வேறு நிர்வாகத் திறமை வேறு தலைமைத்துவ ஆளுமை கொண்டவர்கள் சமுதாயத்தில் வெகு சிலரே.ஆனால் நிர்வாகத்திறமை பலரிடம் உண்டு தலைமைத்துவத்தை நிர்வகிப்பதற்கு இந்த நான்கு கொள்கைகளை சரிசமமாக கடைப்பிடிக்க வேண்டும்.அவையாவன;-
ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து இருப்பது பணியாளரின் பொறுப்பு.
அதை எப்படிச் செய்வது என்பதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது ஒரு நிர்வாகியின் பொறுப்பு.
பிறரைக் கொண்டு ஒரு வேலையைச் செய்து முடிப்பது ஒரு மேற்பார்வையாளரின் பொறுப்பு.
சிறப்பாக பணியாற்றுவதற்கு மற்றவர்களுக்கு உத்வேகமூட்டுவது ஒரு தலைவரின் பொறுப்பு.
எல்லோரும் தலைமைத்துவத்தைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால்வெகு சிலரே அதைப் புரிந்து கொள்கிறார்கள். பெரும்பாலனவர்கள் இதனை விரும்புகிறார்கள். வெகு சிலரே அதை அடைகின்றனர். நம்மில் பெரும்பாலானோர் தலைவராக விரும்புவதால், நாம் தலைமைத்துவத்தை ஆளுமை என்று வரையறை செய்து விடுகின்றோம். பலபேரிடம் தலைமைத்துவத்தைப் பற்றிக் கேளுங்கள், பலரும் பலவிதமான கருத்துக்களை ஒப்புவிப்பார்கள். தலைவரைப் பற்றிய எனது கருத்து இதுதான் ஒருவன் வழிநடத்திச் செல்வதற்காக நினைத்துக் கொண்டு இருக்கும் ஒருவனை ஒருவரும் பின் தொடர்ந்து செல்லாமல் இருந்தால் அவன் வெறுமனே காலத்தைக் கடத்துகிறான் என்று அர்த்தம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பதற்கு நேரம் நிச்சயம் வரும். எனவே தலைமைத்துவத்தை ஏற்று நடத்தக்கூடிய சாத்தியம் உள்ளவர்களூக்கான நேரம் கண்டிப்பாக வந்து சேரும், இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
நா. மகேசன்
கனடா.