Informed by Keathes on March 4, 2026
திருமதி சிவபாக்கியம் கிருஸ்ணானந்தன்
மலர்வு - 17.08.1954 உதிர்வு -04.03.2026
இறுதி யாத்திரை நேரலை
https://youtube.com/live/M_7WNK0HEoc?feature=share
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கிருஸ்ணானந்தன் அவர்கள் இன்று புதன்கிழமை (04/03/2026) இடைக்காட்டில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி - மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லம்மாவின் பெறாமகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் - தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கிருஸ்ணானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், அனுசா, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கணபதிப்பிள்ளை, தர்மலிங்கம், கணேசலிங்கம், காந்தலிங்கம், சிவநாயகி, காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் சிவகாமி, சிவலோஜினி, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், நாகீசன் அவர்களின் அன்புச் சித்தியும் ரதீஸ்வரன், கெங்கா, சித்திரா அவர்களின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற விவேகானந்தனின் அன்பு மைத்துனியும் இரத்தினபூபதியின் உடன் பிறவா சகோதரியும், திவாகர், திவ்வியா, கிருசாந், கிருத்திகா, கிஷாந், அபிராமி, விஷாந்த், திவியா ஆகியோரின் பேர்த்தியும் இதழ்யா, அகனிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வெள்ளிக்கிழமை (06.04.2026)அன்று 12.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் .
இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல் குடும்பத்தினர்
இறுதி யாத்திரை நேரலை
தொடர்புகளுக்கு
கேதீஸ் (மகன்)- +447961929197
அனுசா(மகள்) - 0762901440
ரவி (மருமகன்) -0774195961