By நா. மகேசன் கனடா on April 12, 2026
சொன்ன வார்த்தையை மீளப்பெற முடியாது, செய்த பிழைகளும் அப்படித்தான்.
யாரும் விமர்சிக்க வேண்டாம், இதைக் கூறவும் வேண்டாம். நான் விமர்சனம் என்று சொல்லும்போது, எதிர்மறை விமர்சனத்தைப் பற்றியே!. ஏன் நான் விமர்சிக்கக் கூடாது. ஒருவரைப் பற்றி விமர்சிக்கப் பட்டால் அவர் பொதுப்பணிகளைவிட்டு விலகி தற்பாதுகாப்பில் இறங்கி விடுவார். ஆனால் இதில் கேள்வி ஒன்று இருக்கின்றது. நாம் நல்ல விதமாக விமர்சனம் செய்யலாமா? நான் சொல்வேன் ஆம் என்றுதான் சிலர் பல பேருக்கு மத்தியில் இருந்து கொண்டு வேண்டாத அறிவுரைகளைக் கூறி நம்மைக் குழப்பி விடுவார்கள்.
சரி ஆக்கபூர்வமான விமர்சனம் என்றால் என்ன?. கீழே தள்ளி விடும் எண்ணம் இல்லாமல் உதவும் உணர்வோடு விமர்சியுங்கள். உங்களது விமர்சனங்களில் நல்ல தீர்வுகளை சமுதாயத்திற்கும் மற்றவர்களுக்கும் வழங்குங்கள். ஒருவரின் நடத்தையை விமர்சியுங்கள். ஆனால் அந்த நபரை அல்ல. ஏனென்றால் நாம் அவரை விமர்சிக்கும் பொழுது, அவரது சுய கெளரவத்தைப் புண்படுத்துகின்றாம். விமர்சனம் என்பது உதவி செய்ய வேண்டும், விமர்சனம் செய்தவருக்கும் கெளரவம் கிடைக்க வேண்டும்.
உங்களை ஊக்கப்படுத்தும் விமர்சனங்கள் சில நான் சொல்வேன்.
1. ஒரு பயிற்சியாளராக இருக்க வேண்டும்.
2. மற்றவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளுங்கள், அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.
3. மனப்பாங்கும், பண்பும் ஒருவரைத் திருத்துவராக இருக்க வேண்டுமே தவிர அவரை தண்டிப்பதாக இருக்கக் கூடாது.
4. நீங்கள் எப்போதும் பொறுப்பு என்று சொல்லாதீர்கள்.
5. உங்களது தகவல்களை சரியானவர்களிடம் இருந்து பெறுங்கள்.
6. செயலை விமர்சியுங்கள் ஆனால் அவரை அல்ல!.
7. சொந்த மனக்கசப்புக்களை வெளிப்படுத்தாதீர்கள்.
8. ஒருவர் செய்யும் திட்டத்தால் வரும் நஸ்டத்தையும், அதைத் திருத்திக் கொள்ளாவிட்டால் ஏற்படும் நஸ்டத்தையும் சுட்டிக் காட்டுங்கள்.
9. செய்யும் செயலைப் பற்றி கேள்வி எழுப்பலாம், ஆனால் அந்தச் செயலின் நோக்கத்தை அல்ல, நோக்கமே கேள்விக்குரியதாக இருந்தால் உறவு முறைகளை முடித்துக் கொள்வதே சாலச் சிறந்தது ஆகும்.
10. அளவாக விமர்சனம் செய்யுங்கள். அதிகப்படியாக செய்ய வேண்டாம். விமர்சனம் என்பது நான் சொல்வேன் ஒருவரின் நோய்க்கு மருந்து கொடுப்பது போன்றது.
சிலர் எப்பொழுதும் ஓயாமல் குற்றம் சாட்டுவார்கள்.குளிர்காலத்தில் குளிராகத்தான் இருக்கும். கோடைகாலத்தில் வெட்பமாகத்தான் இருக்கும். எல்லாமே சரியாக நடந்தாலும் சிலர் குறை கூறுவார்கள். குறைகூறுவது நல்ல செயல் அல்ல. ஏனென்றால் 50 வீதமான மக்கள் சிந்திக்க மாட்டார்கள். மீதம் 50 வீதமான மக்கள் உங்களுக்குப் பிரச்சனை வந்தால் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் குறை கூறுவதால் பயன் என்ன?. ஒருபயனும் இல்லை. நாம் எப்போதும் குறை கூறக்கூடாத, குறைகளை. வரவேற்கக்கூடாதா என்ற கேள்விகளை ஏற்படுத்தும்.நான் சொல்வேன் இல்லவே இல்லை என்றுதான் ஆனால் விமர்சனத்தைப் போன்ற குறைகளும் நல்ல விதத்தில் செயல்பட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு உருப்படியான குற்றச்சாட்டு குற்றம் சாட்டுபவர் அக்கறையுடன் இருக்கின்றார் என்று வெளிக்காட்டுகின்றது.
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத் திருத்திக் கொள்ள இரண்டாவது வாய்ப்பைத் தருகின்றது. போதுமான தகவல்கள் இல்லாதபோது மற்றவர்கள் செய்யும் செயலுக்கு மக்கள் ஒரு எதிர்மறையான விளக்கத்தை கொடுப்பார்கள். இந்த உலகமே அவர்களை தவறு செய்பவர்கள் என்று கூறும். ஆனால் அதில் எதுவும் உண்மை இல்லை என்று நான் சொல்வேன் .
நா. மகேசன்
கனடா.