நூற்றாண்டு விழா 2026

By ந. குமார் on July 23, 2026

Card image cap

நூற்றாண்டு காணும் தேத்தாவடியான் முருகுப்பிள்ளையின் வித்தியாசாலை , மகாவித்தியாலமாக பண்டிதர் இராமசாமி வழி நடத்தலும் தலைமையேற்றலிலும் தொடங்கி ஐயரின் தளவில்லா உழைப்பிலும் தானாக வளரத்தொடங்க அடுத்து அடுத்து வந்த பொன்னம்பலத்தார். குணத்தார், மகேசவேலு ஏன் இராசரட்ணத்தினத்தாரும் பெரும் யாழ் ஒன்றினை இணைந்து மீட்டுவதுபோல் மீட்ட அதியுச்ச மழலைகள், சிறுவர்கள், விடலைகள் என எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறுனை தாண்டி சேர, சோழ,பாண்டிய என்கிற மூவேந்த மகாரசாக்களின் பெயரினை புதுப்பித்து சாங்காணி, தட்டாமாட வெளி என களமாடிய மாணவர்களுக்கு வித்தியாலயத்திலே களமைத்து இராம நாதன், இரசரத்தினம், நாவலர் என கூடவே வேலுப்பிள்ளை நாமம் சூட்டி மாணவர்களை வெண்புறாக்களை போல் அலங்கரித்து சித்தியர், ஆசிரியர் உயர் திரு செல்லத்துரை போன்றோரினதும் இன்னும் பல ஆசிரியர்கள் தலைமையில் களமாடி கலை கல்விக்கு ஓர் உயர்தரம் , விஞ்ஞானத்திற்கும் உயர் கல்வி பகுதி ஒன்று தேவை என்றுணர்ந்த ஆசியர் குழாம் HNCE என புது பாடத்திட்டத்தில் உயர்தரம் அமைத்து புகட்டி எஞ்சினியர்கள், வைத்தியர், இன்னும் பல வல்லுனர்களைம், தொழில் துறை, நிர்வாகத்துறை , விவசாயத்துறை என பற்பல விற்பனர்களை உருவாக்கி சமூகத்தில் கலந்து விட்ட பெருமை வித்தியாலத்திற்கும் அதனை சார்ந்தியங்கிய ஆசிரிய மணிகளுக்கும் நன்றி கூறி இப்போது எடுக்கப்படும் விழாவிற்கென ஒரு ஞாபகம் வேண்டும், தேவையும் உண்டு கருதிய பெரும் வள்ளல்கள் சிலர் நாம் போகும்போது எதுவும் கொண்டு செல்வதில்லையே என்கிற உண்மையினை நன்கறிந்த மானிடர் நாம் என்கிற பொருளினை மெய்ப்பட வாரி வழங்கி நிமிர்ந்த வெண்ணிற கீழ் பள்ளி வளாகமும் அமைதியான கொடைக்கு நிகர் இதுதான் என நீண்ட நெடிய நமசிவாயம் மண்டப வளாகம் அமைத்த உயர் திரு வே. நமசிவாயம் அவர்களின் மண்டபமும் பொலிவுற அமைந்த வித்தியாலயத்திலே நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கவும், நடத்தவும், ஒழுங்கு செய்யவும் ஒன்றிணைந்த வேளையிலே ஒவ்வொரு இரவும் விடிகின்றது நூற்றாண்டு விழாவினை எட்டிப்பிடித்து எம் வரலாற்றுக்கடமையினை அதுவும் எம் வாழ் நாளில் ஒரே ஒரு தடவை கிடைக்கும் அந்த கடமை நாளினை எதிர் நோக்கி , மாதங்கள் , நாட்களாகி, நாட்கள் மணிகளாகி ! விரைந்து வாராதோ நூற்றாண்டு நிகழ்வு விழா ! எம் கடமை நிறைவேற்றுவோம் என ஒன்றிணைந்து ! எம் ஊரினை சுற்றி ஊர்வலம் சென்று அடைந்திடுவோம் கல்வி அன்னை மடிதனில்!
நன்றி
ந.குமார்