By வே. இளங்கோ. on Jan. 1, 2021
உலகெங்கும் பரந்து வாழும் எம் இடைக்காடு இணையத்தள வாசகர்கள் நண்பர்களுக்கு இனிய 2021 வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்,
வருகின்ற புத்தாண்டில் ” பழையன கழிதலும் புதியன புகுதலும் “ என்பதற்கிணங்க கடந்த வருட கசப்பான சம்பவங்கள், நிகழ்வுகள் யாவும் நீங்கி புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும் புதிய ஆண்டினை வரவேற்று ,வருகின்ற ஆண்டில் எல்லா நலன்களும் ,நல்வாழ்வு, சுபீட்சம், கல்வி, செல்வம். நோயற்றவாழ்வு, நல்லாரோக்கியம் என எல்லா சுகங்களும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி எமது கருமங்களை தொடங்குவோம்,
கடந்த 15 ஆண்டுகளாக உங்களுடன் பயணித்து உங்களுக்கான சேவையில் நாமும் இணைந்து பல்வேறு தரப்பட்ட கட்டுரைகள் படங்கள், செய்திகள் , அறிவித்தல்கள், வாழ்த்து மடல்கள், போன்ற பயனுள்ள விடயங்களை இடைக்காடு இணையத்தில் பிரசுரித்தும், உங்களின் முக்கியமான அறிவித்தலை உலகெங்கும் பரந்து வாழும் எம் உறவுகளுக்கு உடனுக்குடன் எவ்வித தாமதமுன்றி கொண்டுபோய் சேர்த்தும் உங்களின் ஆக்கங்களை அவ்வப்போது பிரசுரித்து உங்களின் எழுத்தாற்றலை மேம்படுத்தும் விதமாக செயல்பட்டும் வந்திருக்கிறோம் என்பதில் நாம் பெருமிதமடைகிறோம்,
நடப்பு வருடத்தில் இதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இடைக்காடு இணையம் புதுப் பொலிவுடனும் புது வடிவத்திலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உங்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் என்பன இடம்பெறும் வகையிலும் புனரமைக்கப்பட்டு இன்று உங்கள் முன் வருகின்றது.
கடந்த 15 வருடங்களாக நீங்கள் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு இனி வருகின்ற காலங்களிலும் உங்களின் அன்பும் ஆதரவும் என்றும் கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு புதிய வடிவத்திலான இணையத்தளத்தை இன்றிலிருந்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
இந்த இணையத்திற்கான மென்பொருள் வடிவமைப்பிற்கு உதவி புரிந்த தர்சிகா முருகவேல் ( நியூ சீலந்த்து), ஓவிய வடிவமைப்பு செய்து தந்த வன்னியகுலசிங்கம் சின்னதம்பி (இத்தாலி) அவர்களுக்கு நன்றிகள்.
என்றும் உங்கள் பணியில்
வே. இளங்கோ.
கனடா
01-01-2021.