நான் என்னை எப்படிப் சுய மதிப்பீடு செய்து கொள்வது

By N.மகேசன் on Oct. 3, 2020

Card image cap

நான் என்னை எப்படிப் சுய மதிப்பீடு செய்து கொள்வது !!!

உலக covid - 19 முடக்கலின் இரண்டாவது அலையை நாம் தைரியமாக கடந்து
செல்ல விழைகின்றோம் . இன்று வரை துடிப்புடன் இயங்கும் பூலோகம் எல்லா வலிகளையும் எதிர்கொண்டு மீளும் என்பதில் எனக்கு தைரியமான நம்பிக்கை உள்ளது.

சரி……. இனி எமது நீண்ட நெடிய வாழ்வில் …. நாம் ஒவ்வொருவரும் சுய மதிப்பீடு செய்து கொள்வதன் மூலம் நான் யார் என்று அறிந்து கொள்ள முடியும் அவை இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையும் கூட.

“உன்னையே நீ அறிவாய்” என்று எமது சித்தர்களின் கூற்று.அதேபோல் “என்னையே நான் அறிவேன் “ என்பது திருமூலர் கூற்று. இரண்டின் பொருள் ஒன்றுதான்.

ஒவ்வொரு மானிடரும் எவ்வளவு ஆழமான, தங்களைப் பற்றிய பூரண புரிதலுடன் இருக்கிறார்கள்? நான் என்னை எப்படிப் பார்க்கிறேன்? எனது வலிமைகள் என்ன? எனது பலவீனங்கள் என்ன? என்று ஆராய்ந்து எமது சுய மதிப்பீடுகளை கற்று அறிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய நவீன உளவியல் முதன்மை கவனம் ஒருவர் தன்னைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் சுய அறிதல் குறித்தே என்று Dr . நாகமுத்து இராமநாதன் கூறுகின்றார்.ஆக, நீங்கள் யார் என்ற விழிப்புணர்வு உங்கள் ஒருவரால் மட்டுமே உணர முடியும்.ஒருவர் செயற்படுவது அல்லது முடிவு எடுப்பதில் தெளவில்லமல் இருக்கிறார் என்றால், அவர் குறித்த பிரச்சனையின் உள்நோக்கத்தை பெறுவதே அதனை தீர்வு காண்பதற்கான சிறந்த வழி ஆகும்.தன்னைப் பற்றிய சுய அறிதலுக்கும் சுய மதிப்பிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எனது சுய அறிதலில் நான் கற்றுக் கொண்டேன்.

அனைவரிடமும் குறைகள் உள்ளன.இதற்கு நீங்கள் விதி விலக்கு அல்ல.இப்படிப்பட்ட தவறான தெளிவற்ற செயல்களை நீங்கள் அனுமதிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் உங்களைப் பற்றிய சுய மதிப்பீடு.
நீங்கள் உங்கள் தோல்விகள் மீது அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டாதீர்கள்,
அவற்றைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாதீர்கள் .ஏனெனில் வாழ்க்கையைப் போல அவையும் இயல்பானவையே.நீங்கள் இன்று வரை தோற்கவில்லை என்றால் நீங்கள் இன்னும் ஆரம்பிக்க இல்லை என்று அர்த்தம் .
நான் இன்று வரை கற்று உணர்ந்து கொண்ட வழி முறைகளில் இருந்து பெற்ற அனுபவம் என்ன என்றால் “வெளியே வருவதற்குரிய வழியை தெரிந்து கொண்டு உள்ளே புக வேண்டும் என்பதே”

நன்றி .
உங்களில் ஒருவன் மகேசன்.